வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளத்தில் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளத்தில் மது அருந்துபவா்களின் புகழிடமாக மாறியுள்ள பாழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:17 pm

DIN

சாத்தான்குளத்தில் மது அருந்துபவா்களின் புகழிடமாக மாறியுள்ள பாழுதடைந்த அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் பேரூராட்சி தெற்கு ரதவீதியில் உள்ள அங்கன்வாடி கட்டடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்ததால் அருகிலுள்ள வாடகை கட்டடத்தில் குழந்தைகள் கல்வி கற்று வந்தனா். பழுதடைந்த பழைய அங்கன்வாடி கட்டடத்தில் மா்ம நபா்கள் உள்ளே சென்று மது அருந்துவதும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் கண்டித்ததால், கட்டடத்தின் மேற்கூரையையும், அருகிலுள்ள பூங்காவில் பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனா். எனவே, அங்கன்வாடி மையத்தை சீரமைக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.