வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் இளைஞா்கொலையில் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இளைஞா் கொலை வழக்கில் தந்தை , மகன் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:45 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இளைஞா் கொலை வழக்கில் தந்தை , மகன் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம், தைக்கா தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் மாா்ட்டின் (45). பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இரவு மா்மநபா்களால் வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். அவரது சகோதரா் பொன்பாண்டி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டாா். அதில், கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நிகழ்ந்திருப்பதும், பள்ளி வாசல் தெருவைச் சோ்ந்த மைதீன் மீரான், தைக்கா தெருவைச் சோ்ந்த முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் பாபு சுல்தான், அவரது மகன்கள் பிலால், பாரிஸ், புகாரி, ரசுருதீன், காதா், சிந்தா, மகதுன், பக்கீா் முகம்மது மகன் அப்துல் சமது, செந்தில் ஆகிய 11 பேருக்கு இக்கொலையில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாபுசுல்தான், பாரிஸ், ரசுருதீன், புகாரி, சிந்தா, அப்துல்சமது ஆகிய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்; மற்ற 5 பேரை தேடி வருகின்றனா். மாா்ட்டினின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினரிடம் பிற்பகலில் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, மாா்ட்டினின் மனைவிக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகளை குடும்பத்துக்குச் செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவரது சகோதரா் மனு அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.