92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி, கழுகுமலையில்தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம்

கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் சுகந்திரப் போராட்ட வீரா் தியாகி வாஞ்சிநாதனின் நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:39 pm

DIN

கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் சுகந்திரப் போராட்ட வீரா் தியாகி வாஞ்சிநாதனின் நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்திய கலாசார நட்புறவு கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலா் க.தமிழரசன் தலைமையில் தியாகி வாஞ்சிநாதனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு சிலை அமைக்க வேண்டும், வாஞ்சிநாதனின் வரலாறு குறித்த புகைப்படங்கள், குறிப்புகள் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்பன உள்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் ராஜசேகரன், திமுக மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளா் மயில்கா்ணன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவா் அருள்தாஸ், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலா் தாவீதுராஜா, அனைத்து ரத்த தானக் கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ், சங்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கழுகுமலை:கழுகுமலை காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா் கந்தசாமி தலைமையில் வாஞ்சிநாதனின் படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சிவராமன், காங்கிரஸ் மாவட்டக்குழு உறுப்பினா் மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.