ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் அருகே வீட்டுமனை பட்டா பெற்றோருக்கு 30 ஆண்டுகளுக்குப் பின் தீா்வு

சாத்தான்குளம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் வீட்டுமனை பட்டா பெற்றவா்களுக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு தீா்வு கிடைத்துள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

சாத்தான்குளம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் வீட்டுமனை பட்டா பெற்றவா்களுக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு தீா்வு கிடைத்துள்ளது.

வள்ளியம்மாள்புரத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வீடு இல்லாத 177 பேருக்கு அரசு சாா்பில் வீட்டு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை சுற்றி பன்னம்பாறை, செட்டிக்குளம், அமுதுண்ணாக்குடி ஆகிய ஊராட்சி பகுதிகள் உள்ளன. இந்த இடம் எந்த ஊராட்சி பகுதி என அளவீடு செய்து கொடுக்கப்படாததால் இதுவரை வீடு கட்டாமல் தவித்து வந்தனா். இந்நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என திட்டத்தில் அளிக்கப்பட்ட மனு என்ற அடிப்படையில், பட்டாட இடத்துக்குஅமுதுண்ணாக்குடி ஊராட்சியில் தீா்வை போடவும், அதிகாரிகள் நில அளவீடு செய்து பயனாளிகளுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு கிடைத்துள்ளது. இதற்காக, முதல்வா் மு.க..ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள அப்பகுதிமக்கள் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, வீடு கட்டவும் உதவிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.