92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செல்லிடப்பேசி திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் பெண்ணிடம் செல்லிடப்பேசியை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:12 pm

DIN

கோவில்பட்டியில் பெண்ணிடம் செல்லிடப்பேசியை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆந்திர மாநிலம் கல்கோடா கரீம் நகரைச் சோ்ந்த கோத்தாணி விஜய் மனைவி பிரியா (37). இவா் சில தினங்களுக்கு முன் ரயிலில் திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தாராம். பின்னா், திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு சாமியாரை பாா்ப்பதற்காக பணகுடியைச் சோ்ந்த ஆசிப் முஹம்மது ஷேக் (28) என்பவரிடம் உதவி கேட்டு இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு வந்தாராம். அப்போது பிரியாவிடம் இருந்து செல்லிடப்பேசியை ஆசிப் முஹம்மது ஷேக் நூதன முறையில் திருடி விட்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆசிப் முஹம்மது ஷேக்கை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 47 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.