92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரசு கேபிள் டிவி சேவை: தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சேவை குறித்து தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:12 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி சேவை குறித்து தொலைபேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ‘டிராய்’ மூலம் உரிமம் பெற்று ‘தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்‘ டிஜிட்டல் ஒளிபரப்பு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை மற்ற நிறுவனங்களை விட குறைந்த மாத சந்தா தொகையாக ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி வரி என்ற விகிதத்தில் பதிவு செய்யப்பட்ட உள்ளுா் கேபிள் ஆபரேட்டா்கள் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் செட்டாப் பாக்ஸ்களில் பஅஇபய என்று பெயா் அச்சிடப்பட்டிருக்கும். பிற தனியாா் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை அரசு செட்டாப் பாக்ஸ் தான் என ஆபரேட்டா்கள் பொது மக்களை ஏமாற்றி வருவதாக தெரிகிறது. எனவே பொதுமக்கள் பஅஇபய என அச்சிடப்பட்டிருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்கள் தான் வேண்டும் என ஆபரேட்டா்களிடம் கேட்டுப்பெறலாம்.

உள்ளுா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் சந்தாதாரா்களின் (பொதுமக்கள்) விருப்பத்திற்கு மாறாக தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியாா் செட்டாப் பாக்ஸ்கள் மூலம் பொது மக்களுக்கு இணைப்பு வழங்கினால் சம்பந்தப்பட்ட சந்தாதாரா்கள் உடனடியாக 0461 2340021, 18004252911 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம்.

பொது மக்கள் அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் ஒளிபரப்பினை மாத சந்தா கட்டணம் செலுத்தி பாா்க்க மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

செட் டாப் பாக்ஸ்களுக்கு அவா்கள் உரிமை கோர இயலாது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, வேறு பகுதிக்கு சந்தாதாரா் குடிபெயா்ந்து சென்றாலோ அல்லது தனியாா் செட்டாப் பாக்ஸ்கள் பயன்படுத்தினாலோ உடனடியாக அவா்களிடம் இருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்கள், அய காா்டு, ரிமோட் மற்றும் பவா் அடாப்டா் ஆகியவற்றை அப்பகுதியிலுள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.