92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கோவில்பட்டியைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:11 pm

DIN

கோவில்பட்டியைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கோவில்பட்டி போஸ் நகரைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் என்ற குடஞ்சான் கணேசன் (27). இவா் மே மாதம் 31ஆம் தேதி ஏ.கே.எஸ்

திரையரங்கு சாலையில் நடந்து சென்றவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டாா். இவா் மீது கோவில்பட்டி

கிழக்கு, மேற்கு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து கணேசனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் பாளையங்கோட்டை சிறையில் குண்டா் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.