மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி அமைப்படவுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :1 மார்ச் 2021, 7:17 pm

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி அமைப்படவுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீமூலக்கரை பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும், மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுச்செல்லுமாறும் போலீஸாா் அறிவுறுத்தினா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுச்சென்றனா். அதில், ஸ்ரீமூலக்கரை கிராமத்தைச் சுற்றி 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தோா் வசித்துவரும் நிலையில், கல்குவாரி புதிதாக அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில், பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.