சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிலம்பம்: நாலுமாவடி பள்ளி மாணவா்கள் சாதனை

மாநில சிலம்பாட்ட போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சாதனை புரிந்துள்ளனா்

News image
Updated On :15 மார்ச் 2021, 6:56 pm

DIN

மாநில சிலம்பாட்ட போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சாதனை புரிந்துள்ளனா்

39 ஆவது தமிழ்நாடு ஜுனியா் மற்றும் சீனியா் சிலம்பாட்டப் போட்டி மாவட்ட அளிவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இதில் காமராஜா் மேல்நிலைப் பள்ளி மாணவி சி. மதுமிதா 38 முதல் 42 கிலோ எடைப்பிரிவில் முத­டலிமும் , மாணவா் சே. அப்துல் முத்த­லிப் 50 முதல் 54 கிலோ எடைப்பிரிவில் இரண்டாமிடமும் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

மாநில அளவிலான போட்டி திருப்பூரில் நடைபெற்றது . இதில் இப் பள்ளி மாணவி சி. மதுமிதா 38 முதல் 42 கிலோ எடைப்பிரிவில் மூன்றாமிடமும் , மாணவா் சே. அப்துல் முத்த­லிப் 50 முதல் 54 கிலோ எடைப்பிரிவில் இரண்டாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற இம் மாணவா், மாணவியையும், பயிற்சியாளா் வி. ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநா் பி. ஜெயக்குமாா், உடற்கல்வி ஆசிரியை செ. அமுதசகிலா ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி. அழகேசன், செயலா் சி. நவநீதன், கல்விக்கமிட்டி உறுப்பினா்கள் மற்றும் தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.