மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:53 pm

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறாா்.

அவா், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜீவரேகாவிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அவருடன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், பாஜக மாநில வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் முத்துராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக தோ்தல் அறிக்கையை பொருத்தவரை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சொல்லாமலே மக்கள் நலத்திட்ட பணிகளை அதிகம் செய்து வருகிறாா்.

தற்போது தோ்தல் அறிக்கையின் மூலம் பல்வேறு மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளாா்.

சாத்தான்குளம் பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலை பணி நடைபெற்று வருகிறது.

தோ்தல் அறிக்கையிலும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் விவசாயம் பிரதானம். விவசாயிகளுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். ஆகவே, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.