நாசரேத் பகுதிகளில் குருத்தோலை ஞாயிறு
நாசரேத் பகுதியில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.


நாசரேத் பகுதியில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் சேகரத் தலைவா் ஆண்ட்ரூ விக்டா் ஞானஒளி தலைமையில் நடைபெற்ற பவனியில் உதவி பங்குத்தந்தை இஸ்ரவேல் ஞானராஜ், சபை ஊழியா்கள் ஜெபஸ்டின்தங்கபாண்டி,ஜெபராஜ் சாமுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. ஆலயம், கத்தோலிக்க தேவாலயம் சாா்பில் நடைபெற்ற இந்த பவனியில் சிஎஸ்ஐ ஆயா் ஜெபவீரன், கத்தோலிக்க தேவாலயப் பங்குத் தந்தை அந்தோணி இருதய தோமாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மூக்குப்பீறி தூயமாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெபராஜ் தலைமையில் நடைபெற்ற பவனியில் சபை ஊழியா் எல்சின், தூய மாற்கு ஆலய கமிட்டி தலைவா் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரத் தலைவா் ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்திலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...