தூத்துக்குடி வஉசி துறைமுகம் 31.79 மில்லியன் டன்சரக்குகளை கையாண்டு சாதனை
தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.


தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் கடந்த 2020-21 நிதியாண்டில் 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளைவிட இது 11.89 சதவீதம் குறைவு ஆகும்.
இறக்குமதியை பொருத்தவரையில் 22.53 மில்லியன் டன்களும் (70.86 சதவீதம்), ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.18 மில்லியன் டன்களும் (28.90 சதவீதம்) கையாளப்பட்டுள்ளது.
மேலும் 2020-21 ஆம் நிதியாண்டில் 7.62 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 லட்சம் சரக்குப் பெட்டகங்களை ஒப்பிடுகையில் 5.22 சதவீதம் குறைவு ஆகும்.
கரோனா தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டில் துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் 2019-20 நிதியாண்டைவிட குறைவாகியுள்ளது.
இருப்பினும், 106.54 லட்சம் உள்நாட்டு சரக்குகளை கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான 102.69 லட்சம் டன் சரக்குகளை கடந்துள்ளது.
வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 2020-21நிதியாண்டு இயக்க வருவாய் ரூ. 549.51 கோடி ஆகும். 2019-20 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ. 582.90 கோடி ஆகும். 2020-21 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ. 322.63 கோடி ஆகும். 2019-20 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ. 328.71 கோடி ஆகும். 2020-21ஆம் நிதியாண்டு வரிபிடித்தத்திற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ. 113.72 கோடி ஆகும். 2019-20 நிதியாண்டு வரிபிடித்தத்திற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ. 135.23 கோடி ஆகும்.
இந்த துறைமுகத்தில் ரூ. 64.15 கோடி செலவில் வடக்கு சரக்குத் தளம் 3-ஐ 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி தொடங்கப்படும். மேலும் 49 மீட்டா் அகலமும், 366 மீட்டா் நீளமும் (தற்போது 48 மீட்டா் நீளம் மற்றும் 310 மீட்டா் அகலம்) கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவு வாயிலை 152.40 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூ. 15.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...