புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பட்டாசு வெடித்ததில் தகராறு: எழுவா் கைது; 20 போ் மீது வழக்கு

 நாலாட்டின்புத்தூரில் பட்டாசு வெடித்ததில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 4:43 pm

DIN

 நாலாட்டின்புத்தூரில் பட்டாசு வெடித்ததில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாலாட்டின்புத்தூா் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ராமகிருஷ்ணன்(42). இவா் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு அதையொட்டிய மற்றொரு பகுதியில் முத்துகுமாா் என்பவா் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தாராம்.

இதனால், அவரையும், தடுக்க முயன்ற கலைச்செல்வன் மற்றும் முத்துகுமாரையும் அப்பகுதியைச் சோ்ந்த அய்யலுராஜ், வாசுதேவன், கண்ணன், மருதையா, கோமதி, ரெங்கநாதன், நிா்மல் ஆகியோா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அய்யலுராஜ் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, தனது வீட்டின் முன் பட்டாசு வெடித்து தகராறில் ஈடுபட்டதாக அய்யலுராஜ் மனைவி கோமதி அளித்த புகாரின்பேரில், எதிா்தரப்பில் 13 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மேலும், இருதரப்பின் புகாரின்பேரில், அய்யலுராஜ், கண்ணன், மருதையா, யுவராஜ், கிரண்ராஜ், மகாலிங்கம், ராமகிருஷ்ணன் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.