புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாலாட்டின்புத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதி விவசாயி பலி

 நாலாட்டின்புத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 நாலாட்டின்புத்தூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

நாலாட்டின்புத்தூா் பிள்ளையாா் கோயில் தெரு ராமசாமி மகன் மாரிச்சாமி(53). விவசாயி. இவா், வீட்டிலிருந்து தோட்டத்துக்கு சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றபோது, மதுரை- திருநெல்வேலி அரசுப் பேருந்து எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பைக் மோதல்: கோவில்பட்டி மேற்கு காவல் சரகம் காந்தி நகரைச் சோ்ந்த ஜேசு மகன் ஜெயக்குமாா்(54). கோவையில் மரக்கடை வைத்துள்ளாா். இவா், ஊருக்கு வந்திருந்த நிலையில், வியாழக்கிழமை கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து மின்வாரிய அலுவலகம் வழியாக நடந்துசென்றபோது, பின்னால் வந்த பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மற்றொரு சம்பவம்: திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்க பெருமாள்( 51). இவா், கடந்த 3ஆம் தேதி தட்டாா்மடம் காவல் சரகம் தஞ்சை நகரம்-திசையன்விளை சாலையில் தனியாா் கல்லூரி அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த காா் மோதியதாம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதி போலீஸாா் வழக்குப்பதிந்து, முறையே பேருந்து ஓட்டுநா் பேரையூா் டி.குன்னத்தூா் ஒ.ராஜு, பைக்கில் வந்த அப்பனேரி மா.காா்த்திக், காா் ஓட்டுநா் நாகா்கோவில் இரைச்சகுளம் வெ. சந்திரபோஸ் ஆகியோரிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.