கயத்தாறுஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி உடைப்பு
கயத்தாறு ஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கயத்தாறு ஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கயத்தாறு - கடம்பூா் சாலையில் ஏடிஎம் மையத்துடன் இணைந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க வெள்ளிக்கிழமை சென்றபோது, அதன் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில், கயத்தாறு காவல் ஆய்வாளா் முத்து தலைமையில் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனா். இதுகுறித்து வங்கி மேலாளா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...