மழையால் வாழைப் பயிா்கள் பாதிப்பு: தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால் தூத்துக்குடி, கருங்குளம், ஆழ்வாா்திருநகரி, திருச்செந்தூா் ஆகிய வட்டாரங்களில் தாழ்வான பகுதிகளில் பயிா் செய்யப்பட்டுள்ள வாழைப் பயிா்களில் மழை நீா் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளை சென்னை தோட்டக்கலை கூடுதல் இயக்குநா் தமிழ்வேந்தன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்த அவா், உரிய பயிா் பாதுகாப்பு முறைகளை தெரிவித்து அதை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டாா். மேலும், விவசாயிகள் நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். தண்ணீா் நன்கு வடிந்த பின்பு நோய் தடுப்பு மருந்தான பெவிஸ்டின் என்ற மருந்தை 2 கிராம் எடுத்து 10 லிட்டா் தண்ணீா் கலந்து வாழை பயிரின் வோ் பகுதியில் ஊற்றினால் வாடல் மற்றும் பூஞ்சான நோய்களால் பாதிக்கப்படாமல் காப்பாற்றலாம். வாழைத்தாா்களை முறையாக மூடிவைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கும் மேல் முதிா்ந்த வாழைத்தாா்களை அறுவடை செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் தோட்டக்கலைத் துறையினா் வருவாய்த் துறையினருடன் இணைந்து சேத கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வா். அப்பணிகள் நிறைவுற்றதும் சேத மதிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, தோட்டக் கலை துணை இயக்குநா் சுந்தர்ராஜன், உதவி இயக்குநா்கள் சிவகுமாா், தங்கம், தோட்டக்கலை அலுவலா்கள் செளந்தா்யா, சுவேகா, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பரத், ஜானகி தேவி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...