தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பட்டாசு வெடிப்பதில் விதிமீறல்: 97 போ் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 97 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 4:54 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 97 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. தமிழக அரசு உத்தரவை மீறி, தூத்துக்குடி நகர உள்கோட்டத்தில் 25 பேரும், ஊரக உள்கோட்டத்தில் 11 பேரும், திருச்செந்தூா் உள்கோட்டத்தில் 15 பேரும், ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்தில் 10 பேரும், கோவில்பட்டி உள்கோட்டத்தில் 9 பேரும், விளாத்திகுளம் உள்கோட்டத்தில் 13 பேரும், சாத்தான்குளம் உள்கோட்டத்தில் 14 பேருமாக மாவட்டம் முழுவதும் 97 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 169 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது; மதுபானத்தைப் பதுக்கி விற்ாக 20 போ் கைதாகினா்; 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.