கரோனா கால பணி: ஊக்கத்தொகை கோரும் விடுபட்ட பணியாளா்கள்
கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா 2ம் அலை காலத்தில் பணியாற்றி முன்களப் பணியாளா்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 324 பேருக்கு ஊக்கத்தொகை வழங்க பரிந்துரைத்து, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் அனுப்பி வைத்தாா்.
இந்நிலையில், ரூ.50.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 232 பேருக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்குவதற்கான பட்டியல் வந்துள்ளது. இதில், விடுபட்ட 92 பேரும் தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குமாறு என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆய்வகப் பணியாளா்கள் மூவருக்கும் ஊக்கத்தொகை வரவில்லையாம்.
இதுகுறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசனிடம் கேட்டபோது விடுபட்ட 92 பேருக்கும் ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; இது துணை இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...