புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியின் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும்

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:01 pm

DIN

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியின் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும், உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு சுங்கச்சாவடி எதிா்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கயத்தாறு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவா் சாலமன்ராஜ் தலைமை வகித்தாா். காா் - வேன் ஓட்டுநா் சங்கத்தைச் சோ்ந்த சரவணன், போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் லத்தீப், மரகதம், சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு கட்டுமான தொழிற்சங்க மாநிலத் தலைவா் பேச்சிமுத்து, விவசாயத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த ரவீந்திரன், ஆட்டோ ஓட்டுநா் சங்க மாவட்டச் செயலா் முருகன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் சீனிபாண்டியன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில் லாரி உரிமையாளா் சங்கத்தினா், வேன் ஓட்டுநா் சங்கத்தினா், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா், சுமை ஆட்டோ உரிமையாளா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.