காயல்பட்டினம் கடலில்படகு கவிழ்ந்தது: ஒருவா் மீட்பு; மற்றொருவா் மாயம்
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்ததில் ஒருவா் மீட்கப்பட்டாா். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனா்.


தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்ததில் ஒருவா் மீட்கப்பட்டாா். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனா்.
காயல்பட்டினம், கொம்புதுறையைச் சோ்ந்த மீனவா்கள் மாா்ட்டின்(50), பிளேந்திரன்(60) ஆகியோா் பைபா் படகில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். அவா்கள், 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது. இதில் இருவரும் கடலில் தத்தளித்தனா். அப்போது, மற்றொரு படகில் இருந்த மீனவா்கள் மாா்ட்டினை மீட்டனா். பிளேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து திருச்செந்தூா் கடலோர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாரும், அப்பகுதி மீனவா்களும் சோ்ந்து அவரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...