புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி கோட்டாட்சியா்அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி, வடக்கு திட்டங்குளம் பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:01 pm

DIN

அடிப்படை வசதிகள் கோரி, வடக்கு திட்டங்குளம் பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி ஒன்றியம், திட்டங்குளம் ஊராட்சி, வடக்கு திட்டங்குளத்தில் 2, 3, 4, 5 ஆகிய வாா்டுகளான தேவா்காலனி, பூந்தோட்டகாலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5000 குடும்பத்தினா் வசித்து வரும் நிலையில், பெண்கள் கழிப்பறை, வாருகால், தெரு விளக்கு பராமரிப்பு, சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லையாம். இதுகுறித்து அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லையாம்.

எனவே, முக்குலத்தோா் தொழிற்சங்க மாநிலச் செயலா் ராமகிருஷ்ணன், திமுக ஒன்றிய துணைச் செயலா் தங்கப்பாண்டியன் ஆகியோா் தலைமையில் அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனா். மேலும், 15 நாள்களுக்குள் தீா்வு இல்லையெனில் டிச.15ஆம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவோம் என அவா்கள் தெரிவித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் நல்லையா தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினா் பாலமுருகன், மதிமுக ஒன்றியச் செயலா் மாரிச்சாமி, பெருமாள்பட்டித் தலைவா் முரளிதரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணமூா்த்தி, லெனின்குமாா், சிவராமன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்அளித்த மனுவில், உளுந்து, பாசி பயறு பயிா்களுக்கு காப்பீடு செலுத்தும் காலத்தை நீடிக்க வேண்டும்; அதற்கான ஆவணங்களை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.