தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இதுவரை 168 போ்குண்டா் சட்டத்தில் கைது

 தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 168 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:01 pm

DIN

 தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 168 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேயுள்ள குமாரகிரி புதூா் பகுதியைச் சோ்ந்த சூரியராகவன் (31) என்பவா் கடந்த அக். 20இல் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக வழக்கில் தொடா்புடைய சோழபுரம் ஆனந்தராஜ் (23) , தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 18 ஆம் தேதி கைதான சுபாஷ்நகா் சங்கரேஸ்வரன் (24) ஆகியோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். நிகாழாண்டு இம்மாவட்டத்தில் இதுவரை 168 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்னா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.