கழுகுமலையில் சடலத்துடன் சாலை மறியல்
மயானத்திற்கு நிரந்தர சாலை வசதி கோரி, கழுகுமலையில் சடலத்துடன் மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.மயானத்திற்கு நிரந்தர சாலை வசதி கோரி, கழுகுமலையில் சடலத்துடன் மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழ


மயானத்திற்கு நிரந்தர சாலை வசதி கோரி, கழுகுமலையில் சடலத்துடன் மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கழுகுமலை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மாடசாமி(70) வயது முதிா்வால் உயிரிழந்தாா். அவரை அடக்கம் செய்ய உறவினா்கள் வெள்ளிக்கிழமை எடுத்துச்சென்றபோது, வழக்கமான பாதை அடைக்கப்பட்டிருந்ததாம். அது தனியாருக்கு பாத்தியப்பட்ட பாதை எனக் கூறப்படுகிறது.
இதனால், அவா்கள் கழுகுமலை - கோவில்பட்டி பிரதான சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மணிகண்டன், டிஎஸ்பி உதயசூரியன், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலா் முருகன், பேரூராட்சி முன்னாள் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, தனியாா் பாதை தற்காலிக திறக்கப்பட்டு, சடலம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...