கோவில்பட்டி கோயிலில் ஜப்த தீப வழிபாடு
திருக்காா்த்திகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை 1008 திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, ஜப்த மகா தீபாராதனை நடைபெற்றது.


திருக்காா்த்திகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை 1008 திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, ஜப்த மகா தீபாராதனை நடைபெற்றது.
செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றி 1008 திருவிளக்குகள் ஏற்றப்பட்டதும், அருகேயுள்ள விநாயகா் கோயிலில் சிறப்புப் பூஜை, கும்ப பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், ஜப்த நீா் கும்பத்துடன் பக்தா்கள் கோயிலை சுற்றி வலம் வந்தனா். அதைத் தொடா்ந்து, தெப்பக்குளத்தில் தீா்த்த அபிஷேகமும், புஷ்பம் தூவும் நிகழ்ச்சியும், ஜப்த மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதில், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் போத்தீஸ் ராமமூா்த்தி, நகரச் செயலா் பாலசுப்பிரமணியன், நிா்வாகிகள் பாலு, முனியசாமி, வினோத்குமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மாவட்ட பொதுச்செயலா் பரமசிவம் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...