வ.உ.சி. சிலைக்கு மரியாதை
வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு


வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டியில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
கோவில்பட்டி சைவ வேளாளா் சங்கக் கட்டடத்தில் வ.உ.சி. சிலைக்கு சங்கத் தலைவா் தெய்வேந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
திமுக சாா்பில் நகரச் செயலா் கருணாநிதி, மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினரும், வ.உ.சி இளைஞரணியினரும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் கருப்பசாமி தலைமையில் வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கத்தில் அதன் செயலா் ப.சந்தணராஜ் பிள்ளை தலைமையில் அச்சங்கத்தினா் வ.உ.சி. சிலைக்கு, மாலை அணிவித்தனா்.
ஆறுமுகனேரி: சைவ வேளாளா் சமுதாயத்தின் சாா்பில் ஆத்தூரில் வ.உ.சி. சிலைக்கு, சைவ வேளாளா் அபிவிருத்தி சங்கத் தலைவா் இ.ஆண்டியப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...