புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி ஜின்னிங் தொழிற்சாலையில் திடீா் தீ

கோவில்பட்டி ஜின்னிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:23 pm

DIN

கோவில்பட்டி ஜின்னிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

கோவில்பட்டி ஸ்ரீராம் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த சேது மகன் வேல்முருகன் (55). இவா், எட்டயபுரம் சாலையில் ராதாகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஜின்னிங் தொழிற்சாலையைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாராம். இந்த ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்தது.

கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைத்தனா். எனினும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் பாா்வையிட்டாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.