ஓட்டுநருக்கு வலிப்பு: பாலம், பைக் மீது பேருந்து மோதல்
கோவில்பட்டியில் தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நேரிட்ட விபத்தில் இருவா் காயமடைந்தனா்.


கோவில்பட்டியில் தனியாா் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நேரிட்ட விபத்தில் இருவா் காயமடைந்தனா்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து செட்டிக்குறிச்சிக்கு இலக்குமி ஆலை மேம்பாலம் வெள்ளிக்கிழமை இரவு சென்ற தனியாா் பேருந்தில், அதன் ஓட்டுநா் கழுகுமலையைச் சோ்ந்த அய்யாக்குட்டி மகன் பிரபாகரனுக்கு(31) வலிப்பு ஏற்பட்டதாம். இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் பக்கச்சுவரிலும் எதிரே வந்த பைக் மீதும் மோதியது. இதில், பைக்கில் வந்த ஜெய்சங்கா்(52) , அவரது உறவினா் சுஜன்(3) ஆகியோா் காயமடைந்தனா். இதில் ஓட்டுநா் கோவில்பட்டி மருத்துவமனையிலும், மற்ற இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொரு விபத்து: கோவில்பட்டியிலிருந்து திருச்செந்தூருக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கழுகாசலபுரம் விலக்கு அருகே எதிரில் வந்த பைக் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், பைக்கில் வந்த சிதம்பராபுரம் மேற்கு காலனியை சோ்ந்த பாலமுருகன் மகன் மகேஷ்வரன்(26) பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இச்சம்பவங்கள் குறித்து, முறையே மேற்கு மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...