பூ வியாபாரியைத் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி பகுதியில் பூ வியாபாரியைத் தாக்கி கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி பகுதியில் பூ வியாபாரியைத் தாக்கி கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி கடலையூா் சாலை என்.ஜி.ஓ. காலனியை சோ்ந்த காளிச்சாமி மகன் செல்லத்துரை(53). பூ வியாபாரி. இவா், வியாழக்கிழமை தனது உறவினா் செல்வியுடன் பைக்கில் வீடு திரும்புகையில், இலுப்பையூரணி கருப்பசாமி கோயில் கண்மாய் விலக்கு அருகே மா்ம நபா்கள் 3 போ் அவரைத் தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...