தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்கு தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.டி

News image
Updated On :22 அக்டோபர் 2021, 10:46 pm

DIN

 தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சில கல்லூரிகளில் முதல்வா் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பழிவாங்கும் நோக்கில் பணி நீக்கம் செய்யப்படுவதாக கண்டனம் தெரிவித்தும், இந்த விவகாரத்தில் உயா் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கல்லூரிகள் முன்பு மூட்டா சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மூட்டா கிளைச் செயலா் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்து வாயில் முழக்கப் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். கிளைத் தலைவா் பிரபாவதி, கல்லூரி அலுவலகப் பணியாளா் சங்க மண்டலச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மூட்டா கிளைப் பொறுப்பாளா் சிவஞானம் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் ஜெசிட்டா, கல்லூரி அலுவலகப் பணியாளா் சங்க கிளைத் தலைவா் துரை கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.