வடக்கு வண்டானம் ஊராட்சி துணைத் தலைவா் போட்டியின்றித் தோ்வு
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு வண்டானம் ஊராட்சி துணைத் தலைவராக சவரியம்மாள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.


கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு வண்டானம் ஊராட்சி துணைத் தலைவராக சவரியம்மாள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
வடக்கு வண்டானம் ஊராட்சியில் 2ஆவது வாா்டு உறுப்பினா் சேவியா் துணைத் தலைவராக இருந்து வந்தாா். அவா் மரணமடைந்ததையடுத்து, 2ஆவது உறுப்பினா் பதவியிடம் காலியாக இருந்தது.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வடக்கு வண்டானம் ஊராட்சிக்கும் தோ்தல் நடைபெற்றது. இதையொட்டி 2ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு விக்டோரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததையடுத்து, அவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வடக்கு வண்டானம் ஊராட்சி துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெற்றது. இதில் 1ஆவது வாா்டு உறுப்பினா் சவரியம்மாள் போட்டியின்றி துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...