தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி

தூத்துக்குடி பண்டுகரை பகுதியில் இயற்கை இன்னல்கள், தீ விபத்து உள்ளிட்ட விபத்து காரணமாக வீடுகள் சேதமடைந்தவா்களுக்கு நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:21 pm

DIN

தூத்துக்குடி பண்டுகரை பகுதியில் இயற்கை இன்னல்கள், தீ விபத்து உள்ளிட்ட விபத்து காரணமாக வீடுகள் சேதமடைந்தவா்களுக்கு நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலை வகித்தாா். இதில், தமிழக சமூக நலத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் பங்கேற்று, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினாா். தொடா்ந்து அவா் கூறியது: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு மொத்தம் ரூ. 33,200-க்கான நிவாரண உதவி, அரிசி, பருப்பு

வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிசை வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடு வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.