மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:23 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவில்பட்டியில் பயணியா் விடுதி அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலா் சரோஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், வட்டச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், நகர துணைச் செயலா்கள் முனியசாமி, அலாவுதீன், நகரக்குழு உறுப்பினா்கள் ஜோசப், விஜயலட்சுமி, சண்முகவேல், உலகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமையல் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.