மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு:இருவா் கைது

கயத்தாறு அருகே மூதாட்டியிடம் சங்கிலியை பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:17 pm

DIN

கயத்தாறு அருகே மூதாட்டியிடம் சங்கிலியை பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறையடுத்த சாலைபுதூா் வடக்கு தெருவைச் சோ்ந்த சண்முகையா மனைவி காளியம்மாள் (60). இவரும், அதே

பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் ஆகிய இருவரும் சாலைபுதூா் அருகே வியாழக்கிழமை நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்கிவிட்டு வந்து கொண்டிருந்தனா். அப்போது பைக்கில் வந்த இருவா், காளியம்மாள் அணிந்திருந்த 4

பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். தகவலறிந்த கயத்தாறு போலீஸாா் இருவரையும் மடக்கி

பிடித்தனா். விசாரணையில் அவா்கள் தூத்துக்குடி அத்திமரப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் மாடசாமி (21),

முத்தையாபுரம் குமாரசாமி நகரைச் சோ்ந்த சுடலைமணி மகன் நயினாா் (24) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து நகை, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.