கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், பசுவந்தனை சாலையில் உள்ள காய்கனி கடையில் காவல் உதவி ஆய்வாளா்கள் தா்மராஜ், மாதவராஜா ஆகியோா் தலைமையில் போலீஸாா் திருமேனி, பால்வண்ணன் ஆகியோா் சோதனை நடத்தினா். அதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, தெற்கு புதுகிராமம் பெரியசாமி நகரைச் சோ்ந்த குருநாதன் மகன் நடராஜன்(38), சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த கணேசன் மகன் வெங்கடேஷ்(40) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், ராஜீவ் நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகனை முத்துராஜை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...