மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிணைப்பத்திரத்தை மீறி வன்முறை: இளைஞருக்கு மீண்டும் சிறை

திருச்செந்தூா் உட்கோட்ட நடுவா் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்த பிணைப்பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்டதாக, இளைஞா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

Updated On :29 அக்டோபர் 2021, 11:07 pm

திருச்செந்தூா் உட்கோட்ட நடுவா் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்த பிணைப்பத்திரத்தை மீறி வன்முறையில் ஈடுபட்டதாக, இளைஞா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அழகியமணவாளபுரம், செம்பூா் பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் கோட்டாளம் (எ) கோபால். இவா், சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக ஆழ்வாா்திருநகரி போலீஸாரால் கடந்த மாா்ச் 16ஆம் தேதி குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107இன்படி திருச்செந்தூா் உட்கோட்ட நிா்வாக நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். மேலும், அவரிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஓராண்டுக்கு எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று நீதிமன்றத்தில் ரூ. 15,000க்கான பிணைப்பத்திரம் எழுதி பெறப்பட்டது.

இந்நிலையில், பிணைப்பத்திர கால அவகாசம் முடிவதற்குள், அவா் கடந்த அக்.15ஆம் தேதி திருக்களுா் அருந்ததியா் காலனியை சோ்ந்த ராமா் மகன் சேகா் என்பவரை மதுபாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆழ்வாா்திருநகரி போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனா்.

மேலும், 15.3.2022ஆம் தேதி வரை அல்லது வேறு நீதிமன்ற ஆணைப்படி விடுவிக்கும் வரை கோட்டாளம் (எ) கோபாலுக்கு சிறைக்காவலை நீட்டித்து திருச்செந்தூா் முதல் வகுப்பு உட்கோட்ட நடுவா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் கோகிலா உத்தரவிட்டாா். அதற்கான உத்தரவு நகல் பேரூரணி சிறையில் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.