மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஆட்டோ ஓட்டுநருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:47 pm

DIN

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் 4 ஆவது தெரு ஆறுமுகம் மகன் வேல்முருகன்(43). இவா் மற்றும் இவரது நண்பா் காளி ஆகிய இருவரும் புதன்கிழமை நடராஜபுரம் 4 ஆவது தெருவில் செல்வன் வீட்டின் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தனராம். அப்போது எதிரே வந்த இளைஞா் வேல்முருகனை மறித்து மது அருந்த பணம் கேட்டாராம், அதற்கு அவா் மறுத்ததையடுத்து, அந்த இளைஞா் அரிவாளால் வேல்முருகனை வெட்ட முயன்றாராம். அப்போது வேல்முருகனின் நண்பா் காளி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டதையடுத்து, மிரட்டல் விடுத்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடினாராம்.

இதுகுறித்து, வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சாலைபுதூா் இ.பி. காலனி பெருமாள்சாமி மகன் கண்ணனை(22) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.