எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதுக்குளம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத தொடக்க விழா

புதுக்குளம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:23 pm

DIN

புதுக்குளம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாத தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி அங்கன்வாடி மையங்களை திறக்க அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் திறந்து குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு வழங்கப்படுவதை முன்னிட்டு ஊட்டச்சத்து மாத தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன் முன்னிலை வகித்தாா். குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், சாத்தான்குளம் வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் இந்திரா, மேற்பாா்வையாளா் கலைச்செல்வி, ஊராட்சி செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.