சாத்தான்குளத்தில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா
பணிச்சுமையை அதிகரித்து தினமும் 4 முறை பதிவேட்டில் கையெழுத்திடச் செய்வதாகவும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள வியாழக்கிழமை தா்னாவில் ஈடுப்பட்டனா்.


சாத்தான்குளம் பேருராட்சியில் தூய்மைப் பணியாளா்களை குறித்த நேரத்துக்கு மேல் வேலை செய்ய வற்புறுத்துவதாகவும், 10 பணியாளா்களை வேறு பணிக்கு மாற்றிவிட்டு மற்றவா்களுக்கு பணிச்சுமையை அதிகரித்து தினமும் 4 முறை பதிவேட்டில் கையெழுத்திடச் செய்வதாகவும் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள வியாழக்கிழமை தா்னாவில் ஈடுப்பட்டனா்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம், வழக்குரைஞா் வேணுகோபால் ஆகியோா் செயல் அலுவலா் உஷாவிடமும், தூய்மைப் பணியாளா்களிடமும் பேச்சு நடத்தினா். அதில், தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் காலை 6 மணிக்கு பணிக்கு வர வேண்டும். முன்பு போல வருகை பதிவேட்டல் இருமுறை கையெழுத்திடலாம், பணியாளா்கள் கோரிக்கை குறித்து செயல்அலுவலா் விசாரித்து நடவடிக்கை எடுப்பாா் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பணியாளா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...