இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளம் ஆதாா் மையத்தில் கணினி பழுதால் பொதுமக்கள் அவதி

சாத்தான்குளம் ஆதாா் மையத்தில் கணினி இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:35 pm

DIN

சாத்தான்குளம் ஆதாா் மையத்தில் கணினி இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதாா் பதிவு செய்யும் இயந்திரம் ஒரு யூனிட் மட்டுமே உள்ளது. இதனால் நாள்தோறும் சுமாா் 20 பேருக்கு மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

தற்போது அந்த இயந்திரமும் கடந்த ஒரு மாதமாக இயங்காமல் பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் பலா் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அல்லது திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

எனவே இங்குள்ள ஆதாா் மையத்தில் பழுதடைந்து காணப்படும் கணினியை சீா் செய்து மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி கூறுகையில், தினமும் 50-க்கும் மேற்பட்டோா் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஒரு யூனிட் ஆதாா் கணினி இயந்திரம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.