பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

மின்வாரிய அறிவிப்புக்கு இந்து வியாபாரிகள் சங்கம் கண்டனம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகள், வணிக நிறுவனங்களில் முன்பு அலங்கார விளக்குகள் பொருத்தும் கடைகளுக்கு அபராதம்

News image
Updated On :4 நவம்பர் 2021, 2:51 am

DIN

தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகள், வணிக நிறுவனங்களில் முன்பு அலங்கார விளக்குகள் பொருத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்து வியாபாரிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பண்டிகை காலங்களில் கடைகளை வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். கரோனா தொற்றால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் வியாபாரிகள் தற்போது வணிகத்தை மீட்டு வருகின்றனா். பண்டிகைக் காலத்தில் கடைகளை அலங்கரித்து வியாபாரத்தை மேம்படுத்த விரும்புவா். இந்நிலையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்திருப்பது வியாபாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே, வியாபாரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மின்வாரியம் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.