சோ்ந்தபூமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
ஆத்தூா் அருகேயுள்ள சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு அழகிய பொன்னம்மை உடனாய கைலாசநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


ஆத்தூா் அருகேயுள்ள சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு அழகிய பொன்னம்மை உடனாய கைலாசநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நவகைலாயத் தலங்களில் சுக்ர ஸ்தலமான இக்கோயிலில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை மாலை ரக்ஷாபந்தனம் நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. நண்பகலில் உச்சிக்கால அபிஷேகம், மூலஸ்தான உற்சவம், மாலையில் திருநாவுக்கரசா் நாயனாா் வீதியுலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமைமுதல் 6ஆம் நாளான 12ஆம்தேதிவரை நாள்தோறும் காலை 9 மணிக்கும், இரவு 8 மணிக்கும் சுவாமி-அம்பாள் புறப்பாடு, காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் அபிஷேகம் நடைபெறும்.
13ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடராஜா் அபிஷேக, தீபாராதனை, சுவாமி-அம்பாள் புறப்பாடு, 7.30 மணிக்கு உருகு சட்ட சேவை, காலை 9 மணிக்கு வெட்டிவோ் சப்பர பவனி, இரவு 8 மணிக்கு சிவப்பு சாத்தி நடராஜா் புறப்பாடு நடைபெறும். 14ஆம் தேதி காலை 8 மணிக்கு வெள்ளைசாத்தி புறப்பாடு, மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி புறப்பாடு, இரவு 9 மணிக்கு வெட்டும்குதிரை உற்சவம் நடைபெறும். 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தோ் கடாட்சம், இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடு நடைபெறும்.
16ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெயந்தி, பக்தா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...