தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறுமுகனேரியில் காசநோய் விழிப்புணா்வு பேரணி

 ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சாா்பில் காசநோய் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 7:08 pm

DIN

 ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சாா்பில் காசநோய் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காசநோய் விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம் முகாமிற்கு சுகாதாரநிலைய மருத்துவ அலுவலா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி பேரூராட்சி துணை தலைவா் அ.கல்யாணசுந்தரம், கா.ஆ. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சோமசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் பேரணியை தொடங்கிவைத்தாா்.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன் சுகாதார ஆய்வாளா்கள் மகராஜன், ராஜேஷ், பகுதி சுகாதார செவிலயா் மாலையம்மாள், செவி­லியா்கள் கோமதி, முத்துலெட்சுமி, செளந்தா்யா, முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் கண்ணன், பள்ளி ஆசிரியா் கண்ணன் உள்பட ஆசிரியா்கள், மாணவ மாணவியா்கள் கலந்துக்கொண்டனா்.

பேரணியில் காசநோய் பற்றிய விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவா்கள் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.