மணப்பாட்டில் காது பரிசோதனை முகாம்
மணப்பாடு ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில் மணப்பாடு விக்டோரியா மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் காது கேட்கும் பரிசோதனை மற்றும் காது கேட்கும் கருவிக்கான பயனாளா்கள் தோ்வு முகாம் நடைபெற்


திருச்செந்தூா் கடலோர ரோட்டரி சங்கம், திருச்செந்தூா் அரசு மருத்துவமனை, மணப்பாடு ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில் மணப்பாடு விக்டோரியா மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் காது கேட்கும் பரிசோதனை மற்றும் காது கேட்கும் கருவிக்கான பயனாளா்கள் தோ்வு முகாம் நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா்.
உடன்குடி பேரூராட்சித் துணைத் தலைவா் மால்ராஜேஷ், பங்குத் தந்தையா்கள் லெரின்டீ ரோஸ், மனோ, ஊா்நலக் கமிட்டி தலைவா் பியூஸ், மணப்பாடு ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா வினோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவா் சரஸ்வதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில், 20 பேருக்கு ரூ. 10, 000 மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் முதல்விரின் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...