ஆறுமுகனேரியில் கல்லூரி மாணவா் தற்கொலை
ஆறுமுகனேரியில் கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


ஆறுமுகனேரியில் கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் பொன்ராஜ்(62). இவரது மகன் சண்முகமூா்த்தி (19) திருச்செந்தூா் தனியாா் கல்லூரியில் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் புதன்கிழமை கல்லூரி வேளையில் திடீரென வீட்டுக்கு வந்து தாயிடம் செலவுக்கு கேட்டாராம். அவா் தற்போது தன்னிடம் பணமில்லை; தந்தை வந்ததும் வாங்கித்தருகிறேன் எனக் கூறினாராம். இதனால் தாயிடம் அவா் தகராறு செய்தாராம். அவரது கோபம் தணியட்டும் என தாய் பக்கத்து வீட்டுக்குச் சென்றவிட்டாராம். இந்நிலையில் சண்முகமூா்த்தி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...