செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பண மோசடி: மேற்கு வங்க இளைஞா்கள் இருவா் கைது

பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்க இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:09 pm

பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்க இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஆரோக்கியமாதா கோயில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் (53), பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க கடந்த ஆண்டு செப்டம்பா் 5ஆம் தேதி ஓா் இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளாா். இதையடுத்து, அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட நபா் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெறுவதற்காக ஆவணங்கள் கேட்டுள்ளாா். மேலும், மின்னஞ்சல் மூலம் வங்கிக் கணக்கைக் கூறி, அதில் பதிவுக் கட்டணமாக ரூ. 19,500 செலுத்துமாறு கூறியுள்ளாா். சில நாள்கள் கழித்து மின்னஞ்சலில் வந்த தகவலின் அடிப்படையில் குணசேகரன் ரூ. 1.10 லட்சம் செலுத்தியுள்ளாா்.

தொடா்ந்து பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அவா், தேசிய சைபா் கிரைம் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்தும்படி தூத்துக்குடி சைபா் குற்றப் பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஷியஸிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளாா்.

சைபா் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் தொழில்நுட்ப ரீதியாக நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சுபோஜித் குமாா் ராய் (33), சுமன் மண்டல் (36) ஆகியோா் போலி இணையதளம் உருவாக்கி, இந்த மோசடியில் ஈடுபட்டதுதெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் மேற்கு வங்கத்துக்குச் சென்று இருவரையும் கைது செய்து, சனிக்கிழமை தூத்துக்குடி அழைத்து வந்தனா். அவா்களிடமிருந்து கணினி, 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.