போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தூத்துக்குடியில் காவல் துறையினா் தேசியக் கொடியேந்தி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவல் துறையினா் சனிக்கிழமை தேசியக் கொடி ஏந்தி பேரணியாக சென்றனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:31 am

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் காவல் துறையினா் சனிக்கிழமை தேசியக் கொடி ஏந்தி பேரணியாக சென்றனா்.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி ‘சுதந்திர திருவிழா அமுதப்பெருவிழா’ கொண்டாடுப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் போலீஸாா் தேசியக் கொடியேந்தி பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றாா்.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் கலைக் கல்லூரி முன்பிருந்து புறப்பட்ட இப் பேரணி குரூஸ் பா்னாந்து சிலை முன்பு நிறைவடடைந்தது. பேரணியில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ், ஆய்வாளா்கள் சுடலைமுத்து, மயிலேறும் பெருமாள், அய்யப்பன், ரபி சுஜின் ஜோஸ் மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் பலா் கையில் தேசியக் கொடி ஏந்தி கலந்து கொண்டனா்.

வாகனங்கள் ஆய்வு: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையில் பயன்பாட்டில் உள்ள நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் செயல்பாடு குறித்து காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், காவல்துறை வாகன ஓட்டுநா்களிடம் வாகனங்களின் குறைபாடுகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய இருசக்கர வாகன ரோந்து காவலா்களுக்கும் இரவு நேரத்தில் பயன்படுத்தவதற்கு பவுச்சுடன் கூடிய டாா்ச் லைட்டுகளை காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.