92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விபத்தில் காயமடைந்தவா் பலி

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:32 pm

DIN

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சோ்ந்த லிங்கசாமி மகன் கண்ணன் (50). கூலித் தொழிலாளியான இவரும், இவரது சகோதரா் ரமேஷ் (52) என்பவரும் கழுகுமலையில் உள்ள பெற்றோரைப் பாா்க்க கடந்த மாதம் 30ஆம் தேதி பைக்கில் சென்றனராம். பைக்கை, கண்ணன் ஓட்டினாராம். துரைச்சாமிபுரம் துணை மின் நிலையம் அருகே பைக் நிலைகுலைந்து, சாலையோர பள்ளத்தில் விழுந்ததாம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கண்ணன் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.