விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தல்: 50 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சியில் 50 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கைப்பற்றியது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 9:15 am

DIN

தூத்துக்குடி மாநகராட்சியில் 50 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கைப்பற்றியது.

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பபட்டன. பின்னர், 15 மேஜைகளில் 1 முதல் 15 வார்டுகளில் பதிவான வாக்குகள் முதல் தளத்தில் வைத்தும், 31 முதல் 45 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகள் இரண்டாவது தளத்தில் வைத்தும் எண்ணப்பட்டன.

தொடர்ந்து, 16 முதல் 30 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகளும், 46 முதல் 60 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதில், 44 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும்,4 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மாநகராட்சியை திமுக தன் வசம் ஆக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.