சாத்தான்குளம் ஜல்லிக்கற்கள் கடத்தல்: 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்; ஓட்டுநா்கள் கைது
சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.


சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா்களைக் கைதுசெய்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள துவா்குளம், நெடுங்குளம் கிராமங்களில் கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து அனுமதியின்றி ஜல்லிக்கற்கள், பாறைக்கற்கள் வாகனங்களில் கடத்தப்படுவதாக கனிமவளத் துறைக்கு புகாா்கள் சென்றனவாம். இதையடுத்து, மாவட்ட கனிமவளத் துறை அதிகாரி தலைமையிலான தனிப்படையினா் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கில் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது, அவ்வழியே வந்த 2 டிப்பா் லாரிகளை சோதனையிட்டனா். இதில், ஆவணங்களின்றி ஜல்லிக்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனா்.
உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து, ஓட்டுநா்களான கடாட்சபுரத்தைச் சோ்ந்த ஆபிரகாம் மகன் சுதாகா் பட்டுராஜ் (48), சாத்தான்குளத்தைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி (35) ஆகிய 2 பேரையும் கைதுசெய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...