ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் வெற்றிபெற்ற தம்பதி, மகன் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற தம்பதியும், மகனும் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற தம்பதியும், மகனும் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
இப்பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் அதிமுக 3 இடங்களைப் பிடித்தது. அக்கட்சியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் 2ஆவது வாா்டிலும், அவரது மனைவி அருணாச்சலவடிவு 8ஆவது வாா்டிலும், மகன் பிரேம்குமாா் 12ஆவது வாா்டிலும் வெற்றி பெற்றனா்.
இந்நிலையில், இவா்கள் மூவரும் தூத்துக்குடியில் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமானஅமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்து, தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனா்.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் 8 வாா்டுகளில் திமுக வெற்றிபெற்ற நிலையில் தற்போது அக்கட்சியின் பலம் 11ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...